ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் பொதுச் செயலாளராக துமிந்த திசாநாயக்க நியமனம்
அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவினால் நேற்று (25) மாலை கூட்டப்பட்ட அரசியற் குழு கூட்டத்தின் போதே அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் பொதுச் செயலாளராக துமிந்த திசாநாயக்கவை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையிலான அணி நியமித்துள்ளது.
அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவினால் நேற்று (25) மாலை கூட்டப்பட்ட அரசியற் குழு கூட்டத்தின் போதே அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளராக நாடாளுமன்ற உறுப்பினர் சாரத்தி துஷ்மந்த மித்ரபால செயற்படுவதற்கும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் பொதுச் செயலாளர் என்ற வகையில் அவர் எடுத்த தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதற்கும் கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த தடை உத்தரவுகள் 2024 மே 08 வரை அமலில் இருக்கும் என்று உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அமைச்சர்களான மஹிந்த அமரவீர, லசந்த அழகியவண்ண மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த திசாநாயக்க ஆகியோர் சமர்ப்பித்த மனுவை பரிசீலித்த பின்னர் இந்தத் தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.