Breaking News
உலக பொருளாதார மன்றத்தின் தலைவர் பதவியில் இருந்து கிளாஸ் ஸ்க்வாப் பதவி விலகல்
உலக பொருளாதார மன்றத்தின் அறங்காவலர் குழு தலைவர் பதவியில் இருந்து விலகுவார் என்று ஜெனீவாவை தளமாகக் கொண்ட அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
உலக பொருளாதார மன்றத்தின் நிறுவனர் கிளாஸ் ஷ்வாப் உடனடியாக அமலுக்கு வரும் வகையில் உலக பொருளாதார மன்றத்தின் அறங்காவலர் குழு தலைவர் பதவியில் இருந்து விலகுவார் என்று ஜெனீவாவை தளமாகக் கொண்ட அந்த நிறுவனம் திங்களன்று ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
"எனது சமீபத்திய அறிவிப்பைத் தொடர்ந்து, எனது 88 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நிலையில், தலைவர் பதவியிலிருந்தும், அறங்காவலர் குழு உறுப்பினர் பதவியிலிருந்தும் உடனடியாக அமலுக்கு வரும் வகையில் விலக முடிவு செய்துள்ளேன்" என்று அவர் கூறியதாக உலகப் பொருளாதார மன்றம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.





