இலங்கைக்கு 890,000 டொலர்களை வழங்கிய பிரித்தானியா
பிரித்தானிய வெளிவிவகார, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகத்தின் உத்தியோகபூர்வ எக்ஸ் தளப்பக்கத்தில் செய்யப்பட்டிருக்கும் பதிவில், 'டிட்வா' சூறாவளியினால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுடன் பிரித்தானியா உடன்நிற்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
பேரனரத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு சர்வதேச செஞ்சிலுவை சங்கம், இலங்கையிலுள்ள ஐ.நா அலுவலகம் மற்றும் ஏனைய மனிதாபிமானப்பங்காளிகள் ஊடாக மனிதாபிமான உதவிகள் சென்றடையும் வகையில் 890,000 டொலர்கள் உடனடி நிதியுதவியை வழங்குவதாக கொழும்பிலுள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகரகம் அறிவித்துள்ளது.
அதேவேளை உயிர்களை காப்பதற்கும், அவர்களுக்கான தங்குமிடங்களை வழங்குவதற்கும், தூய குடிநீர் மற்றும் மருந்துப்பொருட்களைப் பெற்றுக்கொடுப்பதற்கும் அவசியமான உதவிகளைத் தமது மனிதாபிமான உதவிப்பங்காளிகளுக்கு வழங்கிவருவதாக பிரித்தானிய வெளிவிவகார, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகம் தெரிவித்துள்ளது.
'டிட்வா' சூறாவளியினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவினால் இலங்கை மிகமோசமான பேரழிவுக்கு முகங்கொடுத்திருக்கும் தற்போதைய சூழ்நிலையில், இலங்கையுடனான உடன்நிற்பை வெளிப்படுத்திவரும் சர்வதேச நாடுகள் மற்றும் அமைப்புக்கள், இலங்கைக்கு நிவாரண உதவிகளையும் வழங்கிவருகின்றன.
அதன்படி இதுகுறித்து பிரித்தானிய வெளிவிவகார, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகத்தின் உத்தியோகபூர்வ எக்ஸ் தளப்பக்கத்தில் செய்யப்பட்டிருக்கும் பதிவில், 'டிட்வா' சூறாவளியினால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுடன் பிரித்தானியா உடன்நிற்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்தோடு 'பேரனரத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையில் உயிர்களைக் காப்பதற்கும், அவர்களுக்கான தங்குமிடங்களை வழங்குவதற்கும், தூய குடிநீர் மற்றும் மருந்துப்பொருட்களைப் பெற்றுக்கொடுப்பதற்கும் அவசியமான உதவிகளைத் எமது மனிதாபிமான உதவிப்பங்காளிகளுக்கு வழங்கிவருகிறோம்' எனவும் அப்பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.





