Breaking News
தமிழர் விடுதலைக்கூட்டணியின் முன்னாள் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் 37 ஆவது ஆண்டு நினைவு தினம்
அவரது உருவச்சிலைக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.
தமிழர் விடுதலைக்கூட்டணியின் முன்னாள் தலைவரான அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் 37 ஆவது ஆண்டு நினைவு தினம் யாழ்ப்பாணத்தில் 13-07-2026அன்று அனுஷ்டிக்கப்பட்டது.
பண்ணாகம் கிராம அபிவிருத்தி சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்வின்போது அவரது உருவச்சிலைக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் பண்ணாகம் கிராம மக்கள் கலந்துகொண்டனர்.





