சுரேஷ் சலேவுக்கு 90 நாட்கள் தடுப்புக் காவல்
கைது செய்யப்பட்ட உளவுத்துறை முன்னாள் பிரதானி சுரேஷ் சலேவை தடுப்புக் காவலில் வைத்து தீவிர விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், மேற்படி 90 தடுத்து வைத்து விசாரணை மேற்கொள்ளப்பட உள்ளது.
உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்களைத் திட்டமிட்டமை மற்றும் அதற்கு உதவி ஒத்தாசை புரிந்தமை தொடர்பிலான குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் உளவுத்துறைப் பிரதானி, ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் துவான் சுரேஷ் சலேவை, பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் 90 நாட்கள் தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்யத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய சந்தேகநபரான முன்னாள் உளவுத்துறைப் பிரதானி சுரேஷ் சலேவை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் விசாரணை செய்வதற்கான அனுமதியை குற்றப்புலனாய்வு பிரிவினர் பெற்றுக் கொண்டுள்ளதாகவும் பொலிஸ் தலைமையக தகவல்கல் தெரிவித்துள்ளன.
பேலியகொட பகுதியில் வைத்து 27-02-2026 அன்று காலை 7.50 மணியளவில் கைது செய்யப்பட்ட சுரேஷ் சலே, பயங்கரவாத தடைச்சட்ததின் கீழ் உள்ள விதிவிதானங்களுக்கமைய 72 மணிநேரத் தடுப்புக்காவலில் வைத்து விசாரிக்கப்பட்டு வந்தார்.
இந்நிலையில், விசாரணைகளை விரிவுபடுத்த வேண்டிய அவசியம் கருதி, பயங்கரவாத தடை சட்டத்தின் விதிவிதானங்களுக்கமைய 90 நாட்கள் தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்ய குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேற்படி விசாரணைக்கான அனுமதியை பெற குற்றப்புலாய்வு தினைக்களத்தினர் நடவடிக்கை எடுத்திருந்த நிலையில் நேற்றைய தினம் அதற்கான அனுமதியும் பெறப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கைது செய்யப்பட்ட உளவுத்துறை முன்னாள் பிரதானி சுரேஷ் சலேவை தடுப்புக் காவலில் வைத்து தீவிர விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், மேற்படி 90 தடுத்து வைத்து விசாரணை மேற்கொள்ளப்பட உள்ளது.





