வலுசக்தி அமைச்சராக அநுர கருணாதிலக நியமனம்
வலுசக்தி அமைச்சு பதவியில் இருந்து விலகுவதாக கடந்த 17 ஆம் திகதி ஜனாதிபதிக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.
துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அநுர கருணாதிலக வலுசக்தி அமைச்சராக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளார்.
நிலக்கரி கொள்வனவு குறித்து விசாரணைகளை மேற்கொள்வதற்கு உயர்நீதிமன்ற நீதியரசர் நிஹால் குலதுங்க தலைமையில் பூரண அதிகாரமிக்க ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவை ஜனாதிபதி நியமித்தார்.
ஆணைக்குழுவின் விசாரணைகளுக்கு இடமளிப்பதற்காகவும், பக்கசார்பற்ற விசாரணைகளை முன்னெடுப்பதற்காகவும் தான் வலுசக்தி அமைச்சு பதவியில் இருந்து விலகுவதாக கடந்த 17 ஆம் திகதி ஜனாதிபதிக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.அதேபோல் வலுசக்தி அமைச்சின் செயலாளராக பதவி வகித்த உதயங்க ஹேமபாலவும் பதவி விலகினார்.
இதனைத் தொடர்ந்து அன்றைய தினமே ஜனாதிபதி வலுசக்தி அமைச்சின் செயலாளராக டி.ஆர். அபொன்சுவை நியமித்தார். இவ்வாறான பின்னணியில் வலுசக்தி அமைச்சின் அமைச்சராக அநுர கருணாதிலக நியமிக்கப்பட்டுள்ளார். நேற்று ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி முன்னிலையில் அநுர கருணாதிலக பதவி பிரமாணம் செய்துக் கொண்டார்.





