எரிபொருள் விநியோகத்தில் எவ்வித பாதிப்பும் ஏற்படாது - பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர்
எதிர்வரும் 24 மற்றும் 25ஆம் திகதிகளில் 37000 மெற்றிக் தொன் டீசலும், 29 மற்றும் 30ஆம் திகதிகளில் 30,000 மெற்றிக் தொன் 92 ரக பெற்றோலும் 5,000 மெற்றிக் தொன் 95 ரக பெற்றோலும் வரவுள்ளன.
நாட்டில் எரிபொருள் விநியோகம் தற்போது முழுமையாக உறுதி செய்யப்பட்டுள்ளது. எரிபொருள் விநியோகத்தில் எவ்வித பாதிப்பும் ஏற்படாது மக்கள் அச்சமடைய தேவையில்லை. எரிபொரு கப்பல்கள் நாட்டுக்கு தொடர்ச்சியாக வருகைத்தரவுள்ளன என்று இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே.ஏ.எஸ். டி எஸ். ராஜகருண தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் 28-03-2026 அன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, எதிர்வரும் மாத நடுப்பகுதி வரை டீசல் விநியோகத்தை எவ்வித சிக்கலுமின்றி முன்னெடுக்க முடியும். 92 மற்றும் 95 ரக பெற்றோல் விநியோகம் ஜூன் மாத ஆரம்பம் வரை களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளன. தற்போது இரண்டு கப்பல்கள் தரையிறக்கப்படுகின்றன. வந்த கப்பலில் 30000 மெட்ரிக் தொன் 92 ரக பெற்றோலும், 5,000 மெட்ரிக் தொன் 95 ரக பெற்றோலும் உள்ளன. நாளை இன்று வரும் ஐஒசி கப்பலில் 18000 மெட்ரிக் தொன் டீசல் மற்றும் 92 ரக பெற்றோல் உள்ளன.
எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்திற்குத் தேவையான எண்ணெய் பெறுவதில்தான் சிக்கல் காணப்பட்டது. சுத்திகரிப்பு நிலையத்திலிருந்தே எமக்குத் தேவையான அதிகப்படியான டீசல் மற்றும் எரி எண்ணெய் தயாரிக்கப்படுகின்றன.உராய்வு எண்ணெய் கிடைக்காவிடில் மின்சாரத் தடைக்குச் செல்ல வேண்டி வரும் என்பதால், அதற்கான விலைமனுக்களை கோரியுள்ளோம். அதற்கமைய எதிர்வரும் ஏப்ரல் 2 மற்றும் 4ஆம் திகதிகளுக்கு இடையில் 32,000 மெற்றிக் தொன் டீசலும், 8,000 மெற்றிக் தொன் விமான எரிபொருளும் நாட்டை வந்தடையவுள்ளன.
அதனைத் தொடர்ந்து எதிர்வரும் 6 மற்றும் 7ஆம் திகதிகளில் 37,500 மெட்ரிக் தொன் டீசலும், 7 மற்றும் 8ஆம் திகதிகளில் 32,000 மெற்றிக் தொன் டீசலும் 5,000 மெற்றிக் க் தொன் சூப்பர் டீசல் கப்பலும் வரவுள்ளன. 10 மற்றும் 11ஆம் திகதிகளில் 30000 மெற்றிக் தொன் விமான எரிபொருளும்,18 மற்றும் 19ஆம் திகதிகளில் சினோபெக் நிறுவனத்தின் கப்பல் மூலம் தலா 20,000 மெற்றிக் தொன் டீசல் மற்றும் 92 ரக பெற்றோல் கப்பலும் நாட்டுக்கு வரவுள்ளன.
மின்சார உற்பத்திக்காக 12 மற்றும் 13ஆம் திகதிகளில் 30000 மெட்ரிக் தொன் உராய்வு எண்ணெய் அடங்கிய கப்பலும், 16 மற்றும் 17ஆம் திகதிகளில் 35,000 மெட்ரிக் தொன் 92 ரக பெற்றோலும் வரவுள்ளன. மீண்டுமொரு கப்பல் 21, 22ஆம் திகதிகளில் 20,000 மெற்றிக் தொன் டீசல், 17,000 மெற்றிக் தொன் 92 ரக பெற்றோல் மற்றும் 3,000 மெற்றிக் தொன் 95 ரக பெற்றோலுடன் வரவுள்ளது.
அதேபோல் எதிர்வரும் 24 மற்றும் 25ஆம் திகதிகளில் 37000 மெற்றிக் தொன் டீசலும், 29 மற்றும் 30ஆம் திகதிகளில் 30,000 மெற்றிக் தொன் 92 ரக பெற்றோலும் 5,000 மெற்றிக் தொன் 95 ரக பெற்றோலும் வரவுள்ளன.
ஏப்ரல் மாதத்திற்கான இந்த எரிபொருள் கப்பல்கள் அனைத்தும் எமக்குக் கிடைப்பதில் எந்தச் சிக்கலும் இல்லை. இந்த எரிபொருள்கள் தற்போது மோதல் நிலைக்கு உள்ளாகியுள்ள மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து வரவில்லை என்றார்.





