Breaking News
இறக்குமதி செய்யப்பட்ட அரிசி கையிருப்பு அடுத்த வாரம் சிறிலங்கா வரவுள்ளது
அரிசியை இறக்குமதி செய்வதற்கான அரசாங்கத்தின் அறிவுறுத்தலுக்கு அமைய பல இறக்குமதியாளர்கள் ஏற்கனவே அரிசி இருப்புக்கான ஆர்டர்களை வைத்துள்ளதாக சங்கத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
இறக்குமதி செய்யப்பட்ட அரிசியின் முதலாவது கப்பல் அடுத்த வாரம் நாட்டை வந்தடையும் என்று அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அரிசியை இறக்குமதி செய்வதற்கான அரசாங்கத்தின் அறிவுறுத்தலுக்கு அமைய பல இறக்குமதியாளர்கள் ஏற்கனவே அரிசி இருப்புக்கான ஆர்டர்களை வைத்துள்ளதாக சங்கத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
இந்தியா மற்றும் பாகிஸ்தானில் இருந்து உரிய அரிசி கையிருப்பு ஆர்டர் செய்யப்பட்டுள்ளதாகவும், அடுத்த வாரத்திற்குள் கையிருப்பு வரும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் எடுத்துரைத்தார்.