இஸ்லாத்தை அவமதித்த விவகாரம் - ஞானசார தேரரை நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவு
நீதிவான் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை சவாலுக்குட்படுத்தி மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனு நிராகரிக்கப்பட்டதையடுத்து, அது தொடர்பில் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளதாக சட்டத்தரணி சுட்டிக்காட்டினார்.
இஸ்லாம் மார்க்கத்தை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில் விதிக்கப்பட்ட மேலும் ஒரு சிறைத்தண்டனையை நடைமுறைப்படுத்துவதை இடைநிறுத்துவது குறித்து, நீதிமன்றத்தில் ஆஜராகி கருத்துக்களை முன்வைக்குமாறு பொதுபலாசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசார தேரருக்கு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த வழக்கு கொழும்பு மேலதிக நீதிவான் முன்னிலையில் 25-09-2026 அன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. விசாரணையின் போது, தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஞானசார தேரர் சுகயீனம் காரணமாக நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என அவர் சார்பில் மன்றில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி அனுர மெத்தேகொட நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.
மேலும், நீதிவான் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை சவாலுக்குட்படுத்தி மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனு நிராகரிக்கப்பட்டதையடுத்து, அது தொடர்பில் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளதாக சட்டத்தரணி சுட்டிக்காட்டினார். இந்நிலையில், அந்த மேல்முறையீட்டு மனு பரிசீலிக்கப்பட்டு முடிவடையும் வரை ஞானசார தேரருக்கு எதிரான சிறைத்தண்டனையை நடைமுறைப்படுத்துவதை இடைநிறுத்துமாறு அவர் கோரிக்கை விடுத்தார். மன்றில் முவைக்கப்பட்ட சாட்ச்சியங்களை பரிசீலித்த நீதிவான், இது தொடர்பான விடயங்களை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி முன்வைக்குமாறு உத்தரவிட்டார்.





