Breaking News
ராமர் கோயிலில் இந்திய குடியரசுத் தலைவர் வழிபாடு
ஸ்ரீ ராம யந்திரத்தை அவர் பிரதிஷ்டை செய்தார். பிறகு பால ராமருக்கு ஆரத்தி காட்டி வழிபட்டார்.
இந்தியாவின் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நேற்று (19.3.2026) அயோத்தியில் உள்ள ராமர் கோயிலுக்கு வருகை தந்தார். அங்கு உத்தர பிரதேச மாநில ஆளுநர் ஆனந்தி பென் படேல், முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆன்மிக தலைவர் மாதா அமிர்தானந்தமயி மற்றும் முக்கியப் பிரமுகர்கள் முன்னிலையில் ஸ்ரீ ராம யந்திரத்தை அவர் பிரதிஷ்டை செய்தார். பிறகு பால ராமருக்கு ஆரத்தி காட்டி வழிபட்டார். மக்கள் அனைவரின் மகிழ்ச்சி மற்றும் செழிப்புக்காக அவர் பிரார்த்தனை செய்தார்.





