திருகோணமலையில் உள்ள 29 தாங்கிகளை சர்வதேச எண்ணெய் களஞ்சியமாக மாற்றியமைப்பதற்கு தீர்மானம்
எண்ணெய் தாங்கிகளில் 61 தாங்கிகளை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் ஐ.ஓ.சி ஆகிய இரு தரப்புக்களையும் ஒன்றிணைத்த நிறுவனம் நிர்வகிக்கிறது.
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் ஐ.ஓ.சி நிறுவனத்தின் கூட்டிணைவுடன் நிர்வகிக்கப்படும் 61 தாங்கிகளில் 29 தாங்கிகளை சர்வதேச எண்ணெய் களஞ்சியமாக மாற்றியமைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.திருகோணமலையை எண்ணெய் களஞ்சிய மையமாக மாற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.இதற்குரிய விலைமனுகோரல் வெகுவிரைவில் வெளியிடப்படும் என இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஜே.டி.ராஜகருணா தெரிவித்தார்.
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் காரியாலயத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது, திருகோணமலை எண்ணெய் தாங்கிகளை அபிவிருத்தி செய்தற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதுர்.தாங்கிகளில் 02 தாங்கிகள் முழுமையாக புனரமைக்கப்பட்டு அவற்றில் நீர் நிரப்பட்டு அதன் உறுதிப்பாடு பரிசீலிக்கப்பட்டுள்ளது. எவ்விதமான கசிவும் அதில் காணப்படவில்லை. இதற்கு மேலதிகமாக 03 தாங்கிகளை விரைவாக புனரமைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எண்ணெய் தாங்கிகளில் 61 தாங்கிகளை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் ஐ.ஓ.சி ஆகிய இரு தரப்புக்களையும் ஒன்றிணைத்த நிறுவனம் நிர்வகிக்கிறது. இந்த 61 தாங்கிகளில் 29 தாங்கிகளை சர்வதேச எண்ணெய் களஞ்சியமாக மாற்றியமைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்குரிய விலைமனுகோரல் வெகுவிரைவில் வெளியிடப்படும். திருகோணமலை துறைமுகத்தில் விசேட கப்பல் வசதி காணப்படுவதால் 29 எண்ணெய் தாங்கிகள் ஊடாக சர்வதேச எண்ணெய் களஞ்சியசாலை வசதியை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.இதற்குரிய குழாய் வசதிகளை புனரமைப்பதற்கு பல்வேறு தரப்புடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளோம் என்றார்.





