கிழக்கில் ஜிகாத் அமைப்பினரால் மேற்கொள்ளப்பட்ட படுகொலைகளும் தோண்டப்படல் வேண்டும் - நாம் தமிழர் சமூகசேவை ஒன்றியம்
ஜிகாத் அமைப்பினரின் பின்னணியில் உடைக்கப்பட்ட ஓட்டமாவடி காளி கோயிலுக்கு நீதி நிச்சயமாக வழங்கப்பட வேண்டும்.

யாழ்ப்பாணம் செம்மணி படுகொலை தொடர்பில் அரசின் கவனம் திரும்பியிருக்கின்றது. தோண்ட தோண்ட வெளிவரும் பச்சிளம் பாலகர்களின் மண்டை ஓடுகள், எலும்புக்கூடுகளும், அதிகமான உடல்கள் இருப்பதாகவும், புதைக்கப்பட்டிருப்பதாகவும், தோண்டப்பட்டுக் கொண்டிருக்கின்றன. வடமாகணத்திலே தமிழர்களின் ஆதரவைப் பெற்ற தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் குறிப்பாக மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டுள்ள இந்த அரசாங்கம் இருக்கின்றது. இந்த நிலையில் செம்மணி புதைகுழி விடயம் கவனம் செலுத்தப்பட்டு கொண்டிருக்கிறது இது வரவேற்கத்தக்கது இதற்கு நிச்சயமாக நீதி நிலைநாட்டப்பட வேண்டும்.இவற்றைப்போல் கிழக்கிலும் இன்றும் கண்டுகொள்ளப்படாத படுகொலைகள், தோண்டப்பட வேண்டிய பல புதைகுழிகள் உள்ளன. அவற்றுக்கு நீதியை வேண்டித்தான் எமது நாம் தமிழர் சமூக சேவை ஒன்றியம் இன்று இந்த பத்திரிகையாளர் சந்திப்பினை நடத்துகின்றோம். என நாம் தமிழர சமூக சேவை ஒன்றியத்தின் பொதுச் செயலாளர் கோபாலன் பிரசாத் தெரிவித்துள்ளார்.
களுவாஞ்சிகுடியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்….
குறிப்பாக 1990, 1991 ஆம் ஆண்டு காலப்பகுதியில் முஸ்லிம் ஜிகாத் எனும் அமைப்பினால் பல படுகொலைகள் திட்டமிட்டு செய்யப்பட்டிருக்கின்றன. குறிப்பாக இந்த செய்தியை சர்வதேசத்திற்கும் தேசிய அரசாங்கத்திற்கும் சர்வதேச அரங்கிக்கிற்கும், கொண்டு வருவதற்காகவே நாம் இந்த ஊடக சந்திப்பை செய்கின்றோம்.
குறிப்பாக 20.06.1990 ஆம் ஆண்டு வீரமுனை பிள்ளையார் கோயில் படுகொலை இதன் போது 60 தமிழர்கள் கொலை செய்யப்பட்டார்கள். அதேபோன்று 05.07.1990 ஆம் ஆண்டு வீரமுனையில் 13 தமிழர்கள் கொலை செய்யப்பட்டிருக்கின்றார்கள் 10.07.1990 ஆம் ஆண்டு வீரமுணையில் 15 தமிழர்கள் கொலை செய்யப்பட்டிருக்கின்றார்கள்.
16.07.1990 ஆம் ஆண்டு மல்வத்தை இராணுவத்தினரும் முஸ்லிம் ஊர்காவல் படையினருமாக 30 பேர் 8 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்தனர். அதேபோன்று 26.07.1990ஆம் ஆண்டு வீரமுனையில் 23 சிறுவர்கள் உட்பட 32 இளைஞர்கள் முஸ்லிம் ஊர்கால் படையினரால் மிகவும் கொடூரமான முறையில் கைது செய்யப்பட்டு காணாமல் செய்து படுகொலை செய்து இருக்கின்றார்கள்.
29.07.1990 ஆம் ஆண்டு ஆசிரியர் ஒருவர் குடும்பத்தினருடன் வெளியேறிக் கொண்டிருந்தபொழுது கடத்திச் செல்லப்பட்டு காணாமல் செய்யப்பட்டிருக்கின்றார்.
01.08.1990 ஆம் ஆண்டு சவளக்கடையில் 18 பேர் கைது செய்யப்பட்டு காணாமல் செய்யப்பட்டிருக்கின்றார்கள். அதேபோன்று 12.08.1990 ஆம் ஆண்டு வீரமுரையில் அகதி முகாமில் புகுந்து முஸ்லிம் ஊர்காவல் படையினர் வாளால் வெட்டி தாக்குதல் நடத்தியதோடு, அதில் ஆலய தர்மாகத்தா உட்பட குறிப்பாக தம்பி முத்து சின்னத்துரை உட்பட 14 பேர் கொல்லப்பட்டிருக்கின்றார்கள். அதில் பலர் காயமடைந்து இருக்கிறார்கள். வீரமுனையிலே 600; வீடுகளும், சம்மாந்துறை, மல்லிகைதீவு, வளத்தாப்பிட்டி, கணபதிபுரம், மல்வத்தை, ஆகிய கிராமங்களில் இருந்து 1352 தமிழர்களின் வீடுகள் முஸ்லிம்களால் முற்றாக தீக்கிரியாக்கப்பட்டிருக்கின்றன.
20.06.1990 ஆம் ஆண்டிற்கும் 15.08.1990 ஆண்டுக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் வீரமுனையில் மாத்திரம் 232 தமிழர்கள் கொல்லப்பட்டிருக்கின்றார்கள். 1600 க்கும் அதிகமான வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டிருக்கின்றன.
அயல் கிராமங்களான சம்மாந்துறை முஸ்லிம்கள் சிங்கள இராணுவத்தினரின் உதவியுடன் தமிழர்களை படுகொலை செய்திருக்கின்றார்கள்.
கிழக்கு மாகாணத்தில் மிகவும் மோசமான தாக்குதலுக்கு உள்ளான கிராமங்களான வாழைச்சேனை, செங்கலடி, ஆரையம்பதி நீலாவணை பாண்டிருப்பு போன்ற பல கிராமங்கள் காணப்படுகின்றன.
அம்பாறை மாவட்டத்தில் நிகழ்த்தப்பட்ட இந்த முஸ்லிம் ஜிகாத் அமைப்பினரின் தாக்குதல்களால் பல தமிழர்கள் கொல்லப்பட்டிருக்கின்றார்கள் இதற்கு நிச்சயமாக இந்த அரசாங்கத்தில் நீதி நிலைநாட்டப்பட வேண்டும். கொலை செய்யப்பட்ட மக்களுக்கு நீதி பெற்றுக் கொடுக்க வேண்டும். கொலையாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். என்பதுதான் எமது கோரிக்கையாகும்.
பரம்பரை பரம்பரையாக தமிழர்கள் வாழ்ந்து வந்த கிராமங்கள் முஸ்லிம்களால் சூறையாடப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அவ்வாறு தற்போதுவரையில் சிதைவிக்குள்ளான கிராமங்களாக பாலமுனை, பாணமை, மீனோடக்கட்டு, ஒலுவில் நிந்தவூர், சம்மாந்துறை, கரவாகு, தீகபாவி, மாந்தோட்டம், கொண்டவட்டுவான், ஊரணி, செம்மணிக்குளம், தங்கவேலாயுதபுரம், உடும்பன்குளம், போன்ற பவகிராமங்கள் இருக்கின்றன.
குறிப்பாக தமிழர்கள் பூர்விகமாகக் கொண்ட கிராமங்கள் இன்று முஸ்லிம் காடையர்களால் துடைத்தழிக்கப்பட்டு அந்த தமிழ் கிராமங்கள் முஸ்லிம் கிராமங்களாக மாறி இருக்கின்றன. இந்த சூழலில்தான் அம்பாறை மாவட்டத்தில் படிப்படியாக முஸ்லிம் ஆக்கிரமிப்புக்கு உள்ளான தமிழ் கிராமங்களாக அட்டைப்பள்ளம், சவளைக்கடை, வீரச்சோலை, போன்ற கிராமங்கள் உள்ளன. கூறலாம்.
இவை அனைத்து படுகொலைகளையும் ஊர்காவல்படை என்ற பெயரில் இராணுவத்துடன் சேர்ந்து இயங்கிய ஜிகாத் முஸ்லிம் ஆயுத குழுக்களே இந்த படுகொலைகளை நடத்தி இருந்தார்கள். அவர்களுக்கான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும். புதைகுழிகள் தோண்டப்பட வேண்டும். முஸ்லிம் புதை புலிகள் தோண்டப்படுவதற்கும் மக்களின் வாக்குமூலங்களை செய்கின்ற அதே வேளை முஸ்லிம் ஜிகாத் குழு என்று சொல்லப்படுகின்ற இந்த அமைப்பினர் அந்த அமைப்பின் பெயரில் இயங்கிய முஸ்லிம் காடையர்களையும் தேடி கண்டுபிடித்து இந்த அரசாங்கம் அவர்களை விசாரணை செய்வதோடு, அவர்களை தண்டிப்பதற்கும் குற்றவாளிகளை தண்டிப்பதற்கும் ஊர்காவல்படை என்ற பெயரில் அரசாங்கத்தில் சம்பள பட்டியலில் இருந்தவர்கள் இன்றும் அந்தந்த கிராமங்களில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் அவர்கள் கைது செய்யப்பட வேண்டும்.
அவர்கள் எங்கும் தப்பியோட முடியாது அவர்கள் விசாரித்து பொறுப்பானவர்களும் குற்றவாளிகளும் தண்டிக்கப்பட வேண்டும். என்பதுதான் எமது கோரிக்கையாகும். இந்த கோரிக்கையை கிழக்கு மாகாணத்தில் இருக்கின்ற குறிப்பாக பாராளுமன்ற உறுப்பினர்கள் சாணக்கியன், கோடீஸ்வரன், சிறிநேசன் சிறிநாத், போன்றவர்கள் பாராளுமன்றத்தில் நிச்சயமாக பேசவேண்டும். இதற்கு மட்டக்களப்பு மாவட்டத்தில் இருக்கின்ற சட்டத்தரணிகள் சங்கமும் பொது அமைப்புகளும் இதற்கு ஒரு பொதுநல வழக்கை தாக்கல் செய்ய வேண்டும். அதற்கு நீதியை நிலை நாட்டுவதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
அது மாத்திரமன்றி ஜிகாத் அமைப்பினரின் பின்னணியில் உடைக்கப்பட்ட ஓட்டமாவடி காளி கோயிலுக்கு நீதி நிச்சயமாக வழங்கப்பட வேண்டும்.
நானே அந்தக் காளி கோயிலை உடைத்தேன் அதற்கு எதிராக இருந்த நீதிபதியை மாற்றினேன் அது மாத்திரமன்றி காளி கோயிலை உடைத்து மீன் சந்தையை கட்டி அதுவும் காளி கோயில் அமைந்திருந்த கருவறையில் மூலஸ்தானத்தில் மாட்டு இறைச்சிக் கடையை போட்டு இருக்கின்றேன், என முன்னாள் அமைச்சர், முன்னாள் ஆளுநர், தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர், எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா அவர்கள் ஒப்புதல் வாக்குமூலம் வழங்கி இருக்கின்றார்.
எனவே இதனை இந்த அரசாங்கமும் பாராளுமன்ற சபாநாயகர் அவர்களும் விசாரணை செய்ய வேண்டும். தற்போதைய பாராளுமன்ற உறுப்பினராக இருக்கின்ற எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா அவர்கள் பின்னணியில் உடைக்கப்பட்ட எங்களுடைய காளி கோயிலை மீண்டும் அதே இடத்தில் நிறுவப்பட வேண்டும். அவர் தற்போது பாராளுமன்ற உறுப்பினராக இருக்கின்றார் அவர் நீதித்துறை இவ்வாறு பயன்படுத்தி இருக்கின்றார், அவர் மாவட்ட அபிவித்துக் குழு தலைவர் என்ற பதவியை பயன்படுத்தி செய்திருக்கின்றார், இதற்கு நிச்சயமாக நீதி வழங்கப்பட வேண்டும். நிச்சயமாக இந்த அரசாங்க நீதி வழங்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கின்றது.
எனினும் செம்மொழி புதைகுழி தோண்டப்படுகின்றது ஆங்காங்கே தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு விசாரணைகள் நடைபெறுகின்ற இந்த நேரத்தில் இந்த ஜிகாத் அமைப்பின் பேரில் தமிழ் மக்களை கொன்றளித்த இந்த முஸ்லிம் காடையர்களை நிச்சயம் விசாரிக்கப்பட்டு அவர்கள் இன்றும் கிராமங்களில் வாழ்கின்றார்கள். அவர்களுக்குரிய தண்டனை வழங்கப்பட வேண்டும். என்பதே எமது கோரிக்கை இந்த காளி கோயில் விடயத்திலும் எமது மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் சாணக்கியன், சிறிநேசன், சிறிநாத், போன்றவர்கள் பாராளுமன்றத்திலே பேச வேண்டும். அந்த காளி கோயிலை உரிய இடத்தில் அமைப்பதற்கு நிச்சயமாக பாராளுமன்றத்தில் பேச வேண்டும் என்பது எனது கோரிக்கை.
அது மாத்திரமன்றி இது தொடர்பில் ஒரு பொது நல வழக்கு ஒன்றை சிவில் அமைப்புகள் தமிழ் உணர்வாளர்கள் தமிழ் சட்டத்தரணிகள் ஒன்றிணைந்து இந்த வழக்கை தாக்கல் செய்ய வேண்டும். எனது என்பது எனது பணிவான வேண்டுகோள். இதற்கு யாரும் முன்வராத பட்சத்தில் எமது நாம் தமிழர் சமூக சேவை ஒன்றியத்தினராகிய ஆகிய நாம் இதற்காக பொதுநல வழக்கொன்றை நிச்சயமாக நாங்கள் வழக்கு தாக்கல் செய்து நீதியை நிலைநாட்டுவதற்கு நாங்கள் இந்த அரசாங்கத்திடம் முனைவோம். என அவர் இதன்போது தெரிவித்தார்.