Breaking News
சிறிலங்கா நியூசிலாந்தின் வெலிங்டனில் உயர் ஸ்தானிகராலயம் ஒன்றை அமைக்கவுள்ளது
வெளிவிவகார அமைச்சின் வெளிநாட்டு சொத்துக்கள் முகாமைத்துவம் மற்றும் அபிவிருத்தி பிரிவின் பணிப்பாளர் நாயகம் பிரதீபா சாரம் இந்தத் தூதுக்குழுவிற்கு தலைமை தாங்குவார்.
வெலிங்டனில் சிறிலங்கா உயர் ஸ்தானிகராலயத்தை திறந்து வைப்பது தொடர்பான விடயங்களில் கலந்துகொள்வதற்காக வெளிவிவகார அமைச்சின் உத்தியோகபூர்வ தூதுக்குழு ஏப்ரல் 22 முதல் 25 வரை நியூசிலாந்திற்கு விஜயம் செய்யவுள்ளது.
வெளிவிவகார அமைச்சின் வெளிநாட்டு சொத்துக்கள் முகாமைத்துவம் மற்றும் அபிவிருத்தி பிரிவின் பணிப்பாளர் நாயகம் பிரதீபா சாரம் இந்தத் தூதுக்குழுவிற்கு தலைமை தாங்குவார்.
இந்த விஜயத்தின் போது, தூதுக்குழு நியூசிலாந்தின் வெளியுறவு மற்றும் வர்த்தக அமைச்சின் அதிகாரிகள் மற்றும் பிற தொடர்புடைய முகவர்கள் மற்றும் பங்குதாரர்களுடன் சந்திப்புகளில் ஈடுபடும்.
வெலிங்டனில் உயர் ஸ்தானிகராலயம் ஒன்றை ஸ்தாபிப்பதற்காக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி சமர்ப்பித்த முன்மொழிவுக்கு இவ்வாண்டு ஜனவரி மாதம் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.