ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட விவகாரம் - அரச தரப்பு சாட்சி விசாரணைகள் நிறைவுக்கு
வழக்கு 06-11-2026 அன்று மூவர் அடங்கிய விசேட மேல் நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவைக் கடத்திச் சென்று காணாமல் ஆக்கிய சம்பவம் தொடர்பாக இராணுவப் புலனாய்வுப் பிரிவின் 9 பேருக்கு எதிராகச் சட்டமா அதிபர் தாக்கல் செய்துள்ள வழக்கின் அரச தரப்பு சாட்சி விசாரணைகள் நிறைவுக்கு வந்துள்ளன.
இவ்விவகாரம் தொடர்பிலான வழக்கு 06-11-2026 அன்று மூவர் அடங்கிய விசேட மேல் நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. நீதிபதி நயனா செனவிரத்ன தலைமையிலான லக்மாலி ஹேவாவசம் மற்றும் நலின் ஹேவாவசம் ஆகியோரை உள்ளடக்கிய நீதிபதிகள் அமர்வு முன்னிலையில் இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது.
இதன்போது, வழக்குத் தொடுநரான சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் வசந்த பெரேரா, அரச தரப்பின் சாட்சி விசாரணைகளை நிறைவுக்குக் கொண்டுவருவதாக நீதிமன்றத்திற்கு அறிவித்தார். அதன்படி, பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள், இவ்வழக்கின் பிரதான சாட்சியாளரான 4ஆவது சாட்சியாளரைக் குறுக்கு விசாரணை செய்தபோது பதிவுசெய்யப்பட்ட முரண்பாடுகள் தொடர்பிலான அறிக்கை ஒன்றினை நீதிமன்றத்திற்கும் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் வசந்த பெரேராவுக்கும் கையளித்தனர்.





