Breaking News
இலங்கை கிரிக்கெட் ஆதரவாளர்களுக்கு அர்ஜூனா உறுதிமொழி
சிறிலங்காவில் கிரிக்கெட்டை மீண்டும் கட்டியெழுப்ப தனது அதிகபட்ச ஆதரவை வழங்குவேன் என ரணதுங்க குறிப்பிட்டுள்ளார்.

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இலங்கை கிரிக்கெட் (SLC) இடைக்காலக் குழுவின் தலைவரும், உலகக் கிண்ணத்தை வென்ற இலங்கையின் முன்னாள் தலைவருமான அர்ஜுன ரணதுங்க, மீண்டும் ஒருமுறை இலங்கை கிரிக்கெட் பார்வையாளர்களால் விரும்பப்படும் விளையாட்டாக கிரிக்கெட்டை மாற்றப் போவதாக தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவில் கிரிக்கெட்டை மீண்டும் கட்டியெழுப்ப தனது அதிகபட்ச ஆதரவை வழங்குவேன் என ரணதுங்க குறிப்பிட்டுள்ளார். முக்கியமாக விளையாட்டை மேம்படுத்துவதில் தனது கவனம் செலுத்தப்படும் என்றும், குழுவின் மற்ற உறுப்பினர்கள் இலங்கை கிரிக்கெட்டின் நிர்வாகப் பக்கத்தை கையாள்வார்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
சிறிலங்காவில் கிரிக்கட் விளையாட்டிற்கு புதிய வர்த்தக நாமத்தை அறிமுகப்படுத்துவதே தனது நோக்கமாக இருப்பதாக அவர் தெரிவித்தார்.