Breaking News
சுங்க வரி செலுத்தாமல் இறக்குமதி செய்யப்பட்ட ஜீப் கைப்பற்றப்பட்டது
குறித்த ஜீப் வண்டி 24-11-2026 அன்று பண்டாரவளை பகுதியில் வைத்து பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
சுங்க வரி செலுத்தாமல் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டு பின்னர் பொருத்தப்பட்ட ஜீப் வண்டியொன்று பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
குறித்த ஜீப் தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில், கம்பஹா பிராந்திய குற்ற விசாரணைப் பிரிவின் அதிகாரிகள் கடந்த நவம்பர் 19ஆம் திகதி சந்தேகநபர் ஒருவரைக் கைது செய்துள்ளனர்.
இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட மேலதிக விசாரணைகளின்போது, சுங்க வரி செலுத்தாமல் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டு பின்னர் பொருத்தப்பட்ட குறித்த ஜீப் வண்டி 24-11-2026 அன்று பண்டாரவளை பகுதியில் வைத்து பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கம்பஹா பிராந்திய குற்ற விசாரணைப் பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர்.





