Breaking News
கனடாவின் தேடப்படும் குற்றவாளிகள் பட்டியலில் முதலிடத்தில் கோல்டி பிரார்
கனடாவின் பொதுப் பாதுகாப்பு முன்னெடுப்பான 'போலோ' (BOLO) திட்டம் வியாழக்கிழமை இந்த அறிவிப்பை வெளியிட்டது.
தப்பியோடியுள்ள கேங்ஸ்டர் கோல்டி பிராரைக் கைது செய்வதற்கு வழிவகுக்கும் தகவல்களை அளிப்பவர்களுக்கு 2.5 லட்சம் கனடிய டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.1.63 கோடி) வரை வெகுமதி வழங்கப்படும் என்று கனடா அறிவித்துள்ளது. அந்நாட்டின் தேடப்படும் 25 முக்கியக் குற்றவாளிகளின் பட்டியலில் கோல்டி பிரார் முதலிடத்தில் இடம்பெற்றுள்ளார்.
காவல்துறை அமைப்புகளுடன் இணைந்து தேடப்படும் குற்றவாளிகளைக் கண்டறியும் பணியில் ஈடுபட்டுள்ள கனடாவின் பொதுப் பாதுகாப்பு முன்னெடுப்பான 'போலோ' (BOLO) திட்டம் வியாழக்கிழமை இந்த அறிவிப்பை வெளியிட்டது.
சதீந்தர்ஜீத் சிங் என்பது கோல்டி பிராரின் உண்மையான பெயராகும். 2023 செப்டம்பர் மாதம் 39 வயதான சுக்தூல் சிங் கில் கொலை செய்யப்பட்ட வழக்கில், வின்னிபெக் காவல்துறை அவரைத் தேடி வருகிறது.





