1 கிலோ தங்கம் கடத்திய விமான பணிப்பெண் கைது
கொல்கத்தாவைச் சேர்ந்த சுரபி கதுன் மே 28 அன்று கண்ணூர் பன்னாட்டு விமான நிலையத்தில் தரையிறங்கியபோது கைது செய்யப்பட்டார்.

இந்தியாவின் வருவாய் புலனாய்வு இயக்குநரகம் (டிஆர்ஐ) வியாழக்கிழமை (மே 30) மஸ்கட்டிலிருந்து கண்ணூருக்கு கிட்டத்தட்ட ஒரு கிலோ தங்கத்தை தனது மலக்குடலில் மறைத்து கடத்தியதாக ஒரு விமான பணிப்பெண்ணை கைது செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. கொல்கத்தாவைச் சேர்ந்த சுரபி கதுன் மே 28 அன்று கண்ணூர் பன்னாட்டு விமான நிலையத்தில் தரையிறங்கியபோது கைது செய்யப்பட்டார்.
மலக்குடலுக்குள் மறைத்து தங்கத்தை கடத்தியதாக விமான நிறுவன ஊழியர்கள் கைது செய்யப்பட்ட முதல் வழக்கு இது என்று வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரி ஒருவரை மேற்கோள் காட்டி செய்தி நிறுவனம் பிரஸ் டிரஸ்ட் ஆஃப் இந்தியா (பி.டி.ஐ) தெரிவித்துள்ளது.
இதையடுத்து, தேவையான நடைமுறைகள் முடிந்து, சுரபியிடம் முறைப்படி விசாரணை நடத்தப்பட்டது. இதையடுத்து அவர் குற்றவியல் நடுவர் முன் நிறுத்தப்ப்பட்டு 14 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டு கண்ணூர் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.