Breaking News
டார்ட்மவுத்தில் வியாழக்கிழமை நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார்.
ஹைஃபீல்ட் பார்க் டிரைவ் மற்றும் ட்ரூ நார்த் கிரசண்ட் பகுதியில் நண்பகலில் துப்பாக்கிச் சூட்டுச் சத்தம் கேட்டதாக ஹாலிஃபாக்ஸ் பிராந்தியக் காவல்துறையினர் தெரிவித்தனர்.

துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் வாகனம் ஒன்றில் ஒரு நபரைக் கண்டதாகக் காவல்துறையினர் ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்தனர். பாதிக்கப்பட்டவருக்குக் காவல்துறையினர் சிபிஆர் செய்தனர். ஆனால் அந்த மனிதர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்தத் துப்பாக்கிச் சூடு கொலையாக கருதப்படுகிறது. காவல்துறையினர் விசாரணை நடத்தி வருவதால் பொதுமக்கள் அப்பகுதிக்கு செல்வதை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.