Breaking News
அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்ட தஹவ்வூர் ராணா திகார் சிறையில் அடைக்கப்படுவார்
அவர் திகார் மத்திய சிறையில் வைக்கப்படுவார் என்று வட்டாரங்கள் தெரிவித்தன.

26/11 மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட தஹாவூர் ராணா அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்டு புதன்கிழமை இந்தியாவுக்கு சிறப்பு விமானத்தில் அனுப்பப்பட்டார். அவர் திகார் மத்திய சிறையில் வைக்கப்படுவார் என்று வட்டாரங்கள் தெரிவித்தன.
அவர் மீது டெல்லியில் உள்ள தேசியப் புலனாய்வு முகமைச் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற உள்ளது.
உளவுத்துறை மற்றும் புலனாய்வு அதிகாரிகளின் சிறப்புக் குழுவுடன் ராணாவை ஏற்றிச் செல்லும் சிறப்பு விமானம் புதன்கிழமை இந்திய நேரப்படி இரவு 7:10 மணியளவில் புறப்பட்டு வியாழக்கிழமை பிற்பகல் தரையிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.