Breaking News
அயோத்தியில் குழந்தை இராமரைக் கேரள ஆளுநர் ஆரிப் கான் வணங்கினார்
தனது ராமர் கோயில் பயணத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஆளுநர், அயோத்திக்கு வந்து ராமரை வணங்குவது தனக்கு பெருமை அளிக்கிறது என்றார்.

கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் புதன்கிழமை அயோத்தியில் உள்ள ராமர் கோயிலுக்குச் சென்று குழந்தை இராமரின் சிலைக்கு தலைவணங்கினார். கேரள ஆளுநரின் எக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்ட காணொலியில், பின்னணியில் 'ஜெய் ஸ்ரீ ராம்' என்ற கோஷங்களுக்கு மத்தியில் கான் சிலை முன் வணங்குவதைக் காணலாம்.
தனது ராமர் கோயில் பயணத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஆளுநர், அயோத்திக்கு வந்து ராமரை வணங்குவது தனக்கு பெருமை அளிக்கிறது என்றார்.
"நான் ஜனவரியில் இரண்டு முறை அயோத்திக்கு வந்தேன். அப்போதைய உணர்வு இன்றும் அதே உணர்வுதான். நான் பலமுறை அயோத்திக்கு வந்துள்ளேன். இது எங்களுக்கு மகிழ்ச்சியின் விஷயம் மட்டுமல்ல, மாறாக அயோத்திக்கு வந்து இராமரை வணங்குவது பெருமைக்குரிய விஷயம்" என்று ஆரிஃப் கான் கூறியதாக பி.டி.ஐ மேற்கோளிட்டுள்ளது.