Breaking News
அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நீதிமன்றம் பிணை வழங்கியது
இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பின்னர், அமலாக்கத்துறை தனது சட்டத் தீர்வுகளைப் பயன்படுத்த 48 மணி நேரம் அவகாசம் அளிக்குமாறு நீதிமன்றத்தை கேட்டுக்கொண்டது.

பணமோசடி வழக்கில் தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு டெல்லி நீதிமன்றம் வியாழக்கிழமை பிணை வழங்கியது. இந்த உத்தரவை ரூஸ் அவென்யூ நீதிமன்ற விடுமுறைக் கால நீதிபதி நியாய் பிந்து இன்று பிறப்பித்தார்.
இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பின்னர், அமலாக்கத்துறை தனது சட்டத் தீர்வுகளைப் பயன்படுத்த 48 மணி நேரம் அவகாசம் அளிக்குமாறு நீதிமன்றத்தை கேட்டுக்கொண்டது. ஆனால், இந்த உத்தரவுக்குத் தடை விதிக்க நீதிபதி மறுத்துவிட்டார்.
ஆம் ஆத்மி கட்சித் தலைவர் ஒரு இலட்சம் ரூபாய்ப் பிணை பத்திரத்தை செலுத்திய பின்னர் வெள்ளிக்கிழமை திகார் சிறையில் இருந்து வெளியேறலாம்.