ஆயுள் மற்றும் மருத்துவக் காப்பீட்டுப் பிரீமியம் மீதான 18% ஜிஎஸ்டியை நீக்க வேண்டும்: நிதின் கட்கரி நிர்மலா சீதாராமனுக்குக் கோரிக்கை
இந்தப் பிரீமியங்களுக்கு வரி விதிப்பது வாழ்க்கையின் நிச்சயமற்ற தன்மைகளுக்கு வரி விதிக்க சமம் ஆகும். இது காப்பீட்டுத் துறையின் வளர்ச்சியைத் தடுக்கிறது என்று வாதிட்டார்.

ஆயுள் மற்றும் மருத்துவக் காப்பீட்டுப் பிரீமியத்தில் 18% சரக்கு மற்றும் சேவை வரியை (ஜிஎஸ்டி) நீக்க வேண்டும் என்று மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி வலியுறுத்தியுள்ளார்.
ஜூலை 28 தேதியிட்ட நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கட்கரி எழுதிய கடிதத்தில், இந்தப் பிரீமியங்களுக்கு வரி விதிப்பது வாழ்க்கையின் நிச்சயமற்ற தன்மைகளுக்கு வரி விதிக்க சமம் ஆகும். இது காப்பீட்டுத் துறையின் வளர்ச்சியைத் தடுக்கிறது என்று வாதிட்டார்.
ஆயுள் மற்றும் மருத்துவக் காப்பீட்டுப் பிரீமியம் மீதான ஜிஎஸ்டி வரியை திரும்பப் பெறுவது மூத்த குடிமக்களுக்கு சிக்கலாக இருப்பதால் அதை முன்னுரிமை அடிப்படையில் திரும்பப் பெறுவதற்கான பரிந்துரையை பரிசீலிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள் என்று கட்கரி தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.