Breaking News
இந்திய உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வருகை
திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் செயல் அலுவலர் ஜே.சியாமளா ராவ், கூடுதல் செயல் அலுவலர் வெங்கையா சவுத்ரி ஆகியோர் பாரம்பரிய வரவேற்பு அளித்தனர்.

ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள கோவிலில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா சாமி தரிசனம் செய்தார்.
திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் செயல் அலுவலர் ஜே.சியாமளா ராவ், கூடுதல் செயல் அலுவலர் வெங்கையா சவுத்ரி ஆகியோர் பாரம்பரிய வரவேற்பு அளித்தனர்.
தலைமை நீதிபதி தனது வருகையின் போது, ரங்கநாயகுலா மண்டபத்தில் சேஷ வஸ்திரம் (புனித ஆடை) மற்றும் வேத ஆசீர்வாதம் பெற்றார். அவருக்கு தீர்த்தப் பிரசாதம் மற்றும் வெங்கடேஸ்வரரின் நெகிழிப்படலம் (லேமினேட்) செய்யப்பட்ட புகைப்படமும் வழங்கப்பட்டது,