Breaking News
இந்தியாவில் 3 தாக்குதல் நடத்திய லஷ்கர் தீவிரவாதி பாகிஸ்தானில் சுட்டுக்கொலை
லஷ்கர்-இ-தொய்பா மூத்த உறுப்பினர் சைபுல்லா காலித் பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் கொல்லப்பட்டதாக வட்டாரங்கள் ஞாயிற்றுக்கிழமை இந்தியா டுடே டிவிக்கு தெரிவித்தன.

இந்தியாவில் பல உயர்மட்ட பயங்கரவாத தாக்குதல்களுக்கு ஏற்பாடு செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட லஷ்கர்-இ-தொய்பா மூத்த உறுப்பினர் சைபுல்லா காலித் பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் கொல்லப்பட்டதாக வட்டாரங்கள் ஞாயிற்றுக்கிழமை இந்தியா டுடே டிவிக்கு தெரிவித்தன. அடையாளம் தெரியாத மர்ம ஆட்கள் அவரை தாக்கினர்.
மூன்று பெரிய தாக்குதல்களில் காலித் ஒரு முக்கியச் சதிகாரராக இருந்தார்.
2005 பெங்களூரில் இந்திய அறிவியல் காங்கிரஸ் (ஐ.எஸ்.சி) தாக்குதல், 2006 நாக்பூரில் உள்ள ராஷ்டிரிய சுயம்சேவக் சங்கத்தின் (ஆர்.எஸ்.எஸ்) தலைமையகம் மீதான தாக்குதல் மற்றும் ராம்பூரில் 2008 சிஆர்பிஎஃப் முகாம் தாக்குதல் ஆகியன அவை ஆகும்.