உக்ரைன் பிரச்சனையை தீர்க்க அனைத்து ஒத்துழைப்பையும் வழங்க இந்தியா தயார்: புதினிடம் பிரதமர் மோடி உறுதி
அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை விரைவில் நிறுவுவதை நாங்கள் முழுமையாக ஆதரிக்கிறோம்.

கசான் நகரில் நடைபெற்ற 16-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டின் இடையே ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினார். இருதரப்பு சந்திப்பின்போது, உக்ரைன் பிரச்சனைக்கு அமைதியான தீர்வு காண அனைத்து ஒத்துழைப்பையும் வழங்க இந்தியா தயாராக இருப்பதாக பிரதமர் தெரிவித்தார்.
"ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே நடந்து வரும் மோதல் குறித்து நான் உங்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறேன். நான் ஏற்கனவே கூறியது போல, பிரச்சினைகள் அமைதியான முறையில் தீர்க்கப்பட வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம். அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை விரைவில் நிறுவுவதை நாங்கள் முழுமையாக ஆதரிக்கிறோம். எங்கள் முயற்சிகள் அனைத்தும் மனிதநேயத்திற்கு முன்னுரிமை அளிக்கின்றன. வரவிருக்கும் காலங்களில் சாத்தியமான அனைத்து ஒத்துழைப்பையும் வழங்க இந்தியா தயாராக உள்ளது" என்று பிரதமர் மோடி கூறினார்.