Breaking News
எச்சரிக்கை மட்டும் போதாது, பிரதமர் உரை நிகழ்த்த தடை விதிக்க வேண்டும்: மல்லிகார்ஜுன கார்கே
இந்தியா டுடேவுக்குச் சிறப்பு நேர்காணல் அளித்த அவர், பிரச்சாரத்தின் போது பாஜக தலைவர்கள் வெறுப்பு உரைகளை வழங்குகிறார்கள் என்று கூறினார்.

பிரதமர் நரேந்திர மோடி 10 நாட்கள் உரையாற்ற தேர்தல் ஆணையம் தடை விதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தியுள்ளார்.
இந்தியா டுடேவுக்குச் சிறப்பு நேர்காணல் அளித்த அவர், பிரச்சாரத்தின் போது பாஜக தலைவர்கள் வெறுப்பு உரைகளை வழங்குகிறார்கள் என்று கூறினார். முஸ்லிம்களுக்கு எதிராக மதவாத உணர்வுகளை பிரதமர் வெளிப்படையாக தூண்டிவிடுகிறார் என்று அவர் கூறினார்.
அவருக்கு தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுப்பது மட்டுமின்றி, 10 நாட்களுக்கு பிரசாரம் செய்யவும் தடை விதிக்க வேண்டும் என்றார்.