எதிர்க்கட்சிகளின் சாதி அரசியல் குறித்துப் பிரதமர் மோடி எச்சரிக்கை
தேச விரோதிகளின் இந்த முயற்சி, நெருக்கடியை புரிந்து கொள்ளுங்கள், நாம் அனைவரும் சேர்ந்து இதுபோன்ற செயலை முறியடிக்க வேண்டும்," என்று பிரதமர் மோடி கூறினார்.

எதிர்க்கட்சிகளின் சாதி அடிப்படையிலான அரசியலை கண்டித்த பிரதமர் நரேந்திர மோடி, சிலர் தங்களின் சுயநலத்துக்காக சமூகத்தை பிளவுபடுத்த முயற்சிப்பதாக குற்றம்சாட்டினார். குஜராத்தின் வத்தலில் ஸ்ரீ சுவாமிநாராயண் கோவிலின் 200வது ஆண்டு விழாவில் பங்கேற்று உரையாற்றிய பிரதமர் மோடி, 2047ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற “தேசிய எதிரிகளுக்கு” எதிராக ஒன்றுபட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
“சமூகத்தை பிளவுபடுத்தும் சதி நடக்கிறது சாதி, மதம், மொழி, உயர்ந்தவன், தாழ்ந்தவன், ஆண்கள், பெண்கள், கிராமங்கள் மற்றும் நகரங்களின் அடிப்படையை நாம் புரிந்துகொள்வது அவசியம் தேச விரோதிகளின் இந்த முயற்சி, நெருக்கடியை புரிந்து கொள்ளுங்கள், நாம் அனைவரும் சேர்ந்து இதுபோன்ற செயலை முறியடிக்க வேண்டும்," என்று பிரதமர் மோடி கூறினார்.