Breaking News
எலக்ட்ரானிக் இன்டர் லாக்கிங்கில் ஏற்பட்ட மாற்றத்தால் விபத்து ஏற்பட்டது: ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்
ரயில் விபத்து தொடர்பான விசாரணை நிறைவடைந்துள்ளதாகவும், ரயில் பாதுகாப்பு ஆணையர் விரைவில் அறிக்கை சமர்ப்பிப்பார் என்றும் அமைச்சர் கூறினார்.

மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், ஒடிசாவின் பாலசோரில் மூன்று ரயில்கள் மோதி விபத்துக்குள்ளான இடத்தைப் பார்வையிட்ட பிறகு, விபத்துக்கான காரணம் கண்டறியப்பட்டுள்ளதாக ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார். ரயில் விபத்து தொடர்பான விசாரணை நிறைவடைந்துள்ளதாகவும், ரயில் பாதுகாப்பு ஆணையர் விரைவில் அறிக்கை சமர்ப்பிப்பார் என்றும் அமைச்சர் கூறினார்.
"ரயில்வே பாதுகாப்பு ஆணையர் இந்த விஷயத்தை விசாரித்த பின் விசாரணை அறிக்கை வரட்டும். ஆனால், சம்பவத்திற்கான காரணத்தையும் அதற்கு காரணமானவர்களையும் நாங்கள் கண்டறிந்துள்ளோம். எலக்ட்ரானிக் இன்டர் லாக்கிங்கில் ஏற்பட்ட மாற்றத்தால் இது நடந்தது. இப்போது எங்கள் கவனம் மறுசீரமைப்பில் உள்ளது,” என்று அமைச்சர் மேலும் கூறினார்.