Breaking News
ஏர் இந்தியா விமான விபத்தில் குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி மரணம்
விமான விபத்தை ஒரு "சோகமான சம்பவம்" என்று அழைத்த பாட்டீல், உயிர் இழப்பு குறித்து ஆழ்ந்த வருத்தத்தை வெளிப்படுத்தினார்.

அகமதாபாத்தில் விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்த குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி உயிரிழந்ததாக பாஜக மாநிலத் தலைவர் சி.ஆர்.பாட்டீல் தெரிவித்தார். லண்டன் சென்ற போயிங் 787}8 ட்ரீம்லைனர் விமானம் புறப்பட்ட ஐந்து நிமிடங்களில் அகமதாபாத் விமான நிலையம் அருகே விபத்துக்குள்ளானது.
விமான விபத்தை ஒரு "சோகமான சம்பவம்" என்று அழைத்த பாட்டீல், உயிர் இழப்பு குறித்து ஆழ்ந்த வருத்தத்தை வெளிப்படுத்தினார்.
முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி காலமானார். பாஜக குடும்பம் ஆழ்ந்த வருத்தத்தில் உள்ளது" என்று பாட்டீல் மெஹ்சானாவில் செய்தியாளர்களிடம் கூறினார். இறந்த அனைவருக்கும் கடவுள் அமைதியை வழங்கட்டும், இறந்தவர்களின் குடும்பங்களுக்கு வலிமையையும் அமைதியையும் வழங்கட்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.