Breaking News
கீவ்நகரில் இந்திய மருந்து கிடங்கு மீது ரஷ்ய ஏவுகணை தாக்குதல்
புதுடெல்லியுடன் சிறப்பு நட்பு இருந்தபோதிலும் மாஸ்கோ வேண்டுமென்றே இந்திய வணிகங்களை குறிவைத்ததாகவும் அது கூறியது.

கீவ் நகரில் உள்ள இந்திய மருந்து நிறுவனத்தின் கிடங்கை ரஷ்ய ஏவுகணை தாக்கியதாக இந்தியாவில் உள்ள உக்ரைன் தூதரகம் சனிக்கிழமை குற்றம் சாட்டியது.
புதுடெல்லியுடன் சிறப்பு நட்பு இருந்தபோதிலும் மாஸ்கோ வேண்டுமென்றே இந்திய வணிகங்களை குறிவைத்ததாகவும் அது கூறியது.
ரஷ்ய தாக்குதலில் குறிவைக்கப்பட்ட கிடங்கு இந்தியாவின் பெரிய மருந்து நிறுவனமான குசும் நிறுவனத்திற்கு சொந்தமானது.
"இன்று உக்ரைனில் உள்ள இந்திய மருந்து நிறுவனமான குசும் கிடங்கை ரஷ்ய ஏவுகணை தாக்கியது. இந்தியாவுடன் 'சிறப்பு நட்பு' என்று கூறிக்கொண்டு, மாஸ்கோ வேண்டுமென்றே இந்திய வணிகங்களை குறிவைக்கிறது. குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கான மருந்துகளை அழிக்கிறது" என்று இந்தியாவில் உள்ள உக்ரைன் தூதரகம் பதிவிட்டுள்ளது.