Breaking News
கேரளாவில் இளைஞர் சடலமாக மீட்பு
தலையில் பலத்த காயங்கள் உட்பட பல காயங்களின் அடையாளங்களைக் கொண்டிருந்த சடலம், உள்ளூராட்சி மன்ற உறுப்பினரால் கண்டுபிடிக்கப்பட்டது.

கேரளாவின் பத்தனம்திட்டா மாவட்டத்தில் 40 வயது மதிக்கத்தக்க இளைஞர் வெள்ளிக்கிழமை உறவினரின் வீட்டில் இரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். இது கொலை வழக்காக இருக்கலாம் எனக் காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
தலையில் பலத்த காயங்கள் உட்பட பல காயங்களின் அடையாளங்களைக் கொண்டிருந்த சடலம், உள்ளூராட்சி மன்ற உறுப்பினரால் கண்டுபிடிக்கப்பட்டது. அவர் உடனடியாகக் காவல்துறையினருக்கும் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினருக்கும் தகவல் கொடுத்தார்.
இறந்தவரின் 55 வயது உறவினரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக மூத்த காவல்துறைஅதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தினார். உறவினர் உட்பட பலரிடம் விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில், இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. விசாரணை நடந்து வருகிறது.