சிறுபான்மை கல்லூரி சேர்க்கையில் எஸ்சி, எஸ்டி, ஓபிசி இடஒதுக்கீடு இல்லை: மும்பை உயர்நீதிமன்றம்
நீதிபதிகள் எம்.எஸ்.கார்னிக் மற்றும் என்.ஆர்.போர்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு, "மனுதாரர்களின் வழக்கறிஞர்கள் முன்வைத்த சமர்ப்பிப்புகளில் நாங்கள் உண்மையைக் காண்கிறோம்.
மும்பை: மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள சிறுபான்மை கல்லூரிகளில் முதலாம் ஆண்டு ஜூனியர் கல்லூரி சேர்க்கைக்கு எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி இடஒதுக்கீடு வழங்கிய மகாராஷ்டிரா அரசின் முடிவுக்கு மும்பை உயர் நீதிமன்றம் வியாழக்கிழமை தடை விதித்தது.
நீதிபதிகள் எம்.எஸ்.கார்னிக் மற்றும் என்.ஆர்.போர்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு, "மனுதாரர்களின் வழக்கறிஞர்கள் முன்வைத்த சமர்ப்பிப்புகளில் நாங்கள் உண்மையைக் காண்கிறோம். எனவே சிறுபான்மை கல்வி நிறுவனங்களில் எந்த இடங்களிலும் சமூக இடஒதுக்கீடு ஆணை பொருந்தாது" என்று கூறியது.
இந்த மனுவுக்கு 4 வாரங்களுக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், அதன் பிறகு 2 வாரங்களில் பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் வழங்கினர். இந்த மனு மீதான விசாரணை ஆகஸ்ட் 6-ம் தேதி மீண்டும் நடைபெற உள்ளது.