ஜம்மு காஷ்மீர் தாக்குதலை கண்டித்ததற்காக தலிபான் அமைச்சருக்கு ஜெய்சங்கர் நன்றி தெரிவிப்பு
தொலைபேசி அழைப்புக்குப் பிறகு சமூக ஊடக தளமான எக்ஸ் தளத்தில் ஜெய்சங்கர் ஒரு பதிவில் எழுதினார்:

இரு நாடுகளுக்கும் இடையே "நம்பிக்கையின்மையை உருவாக்கும்" முயற்சிகளை ஆப்கானிஸ்தான் நிராகரித்ததை இந்தியா வியாழக்கிழமை வரவேற்றது, வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தலிபான்களின் வெளியுறவு அமைச்சர் அமீர் கான் முத்தகியுடன் முதல் முறையாக உரையாடினார். பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை கண்டித்ததற்காக முத்தகிக்கும் ஜெய்சங்கர் நன்றி தெரிவித்தார்.
வியாழக்கிழமை தொலைபேசி உரையாடலில், ஆப்கானிஸ்தான் மக்களுடனான இந்தியாவின் பாரம்பரிய நட்பை ஜெய்சங்கர் அடிக்கோடிட்டுக் காட்டினார். அவர்களின் வளர்ச்சித் தேவைகளுக்கு இந்தியாவின் தொடர்ச்சியான ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தினார்.
தொலைபேசி அழைப்புக்குப் பிறகு சமூக ஊடக தளமான எக்ஸ் தளத்தில் ஜெய்சங்கர் ஒரு பதிவில் எழுதினார்:
“இன்று மாலை ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சர் மவ்லவி அமீர் கான் முத்தகியுடன் நல்ல உரையாடல் நடத்தினேன். பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு அவர் அளித்த கண்டனத்தை மனதாரப் பாராட்டுகிறேன்." என்று எழுதினார்.