தமிழக விமானப்படைத் தளத்தில் பாதுகாப்பு வீரர் திடீர் தற்கொலை
கண்காணிப்பு கோபுரம் ஒன்றில் பணியில் இருந்த காளிதாஸ் தற்கொலை செய்து கொண்டதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.

தமிழ்நாட்டின் ஆவடியில் உள்ள இந்திய விமானப்படை தளத்தில் நிறுத்தப்பட்டிருந்த 55 வயதான பாதுகாவலர் தனது சேவை துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது. உயிரிழந்தவர் தமிழகத்தின் மயிலாடுதுறையைச் சேர்ந்த ஏ.எம்.காளிதாஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் பாதுகாப்புப் பாதுகாவல் படையில் (டி.எஸ்.சி) பணியாற்றி வந்தார்.
இந்த சம்பவம் ஜூலை 24, புதன்கிழமை அதிகாலை 4 மணியளவில் நடந்தது. கண்காணிப்பு கோபுரம் ஒன்றில் பணியில் இருந்த காளிதாஸ் தற்கொலை செய்து கொண்டதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.
அதிகாலை 4 மணியளவில், பல துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்களால் பாதுகாப்புப் படையினர் விழித்துக் கொண்டனர். காளிதாசின் உடல் ரத்த வெள்ளத்தில் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. காளிதாஸ் தற்கொலைக்கான காரணம் குறித்து முத்துப்புதுப்பேட்டைக் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.