Breaking News
தாயிடம் நகை, பணத்தை திருடிய பெண் கைது
இந்த சம்பவம் ஜனவரி 30 ஆம் தேதி பிற்பகல் 2:00 மணி முதல் 2:30 மணிக்குள் நடந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

உத்தம் நகர் பகுதியில் தனது சொந்த தாயின் வீட்டில் கொள்ளையடித்த பெண்ணை தில்லி காவல்துறையினர் கைது செய்தனர்.
அந்தப் பெண் தனக்கு நிதி உதவி தேவைப்பட்டதாலும், தனது தாயிடமிருந்து அன்பு கிடைக்காமையாலும் ரூ .25,000 ரொக்கத்தையும் தங்கம் மற்றும் வெள்ளி நகைகளைத் திருடியதாக காவல்துறையினர்தெரிவித்தனர்.
இந்த சம்பவம் ஜனவரி 30 ஆம் தேதி பிற்பகல் 2:00 மணி முதல் 2:30 மணிக்குள் நடந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். விசாரணையில், ஸ்வேதா என்ற பெண், நிதி நெருக்கடிகள் மற்றும் தனது தங்கையுடன் ஒப்பிடும்போது தனது தாயால் குறைவாக நேசிக்கப்படுவதை காரணம் காட்டி குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
தனது தாய் மிகவும் நேசித்த தனது தங்கை மீது பொறாமையும் வெறுப்பும் கொண்ட பின்னர் கொள்ளையைத் திட்டமிட்டதை அவர் ஒப்புக்கொண்டார்.