Breaking News
தில்லி தேர்தல்: 21 காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியலில் ஷீலா தீட்சித்தின் மகன் சந்தீப் இடம் பிடிப்பு
மக்களவை முன்னாள் எம்.பி.யான சந்தீப் தீட்சித் புதுடெல்லி தொகுதியில் போட்டியிடுகிறார்.

தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் 21 வேட்பாளர்களின் பெயர்களை காங்கிரஸ் கட்சி வியாழக்கிழமை வெளியிட்டது.
மக்களவை முன்னாள் எம்.பி.யான சந்தீப் தீட்சித் புதுடெல்லி தொகுதியில் போட்டியிடுகிறார். டெல்லி காங்கிரஸ் தலைவர் தேவேந்தர் யாதவ் பட்லி தொகுதியிலும், கட்சியின் செய்தித் தொடர்பாளர் ராகினி நாயக் வஜீர்பூர் தொகுதியிலும் போட்டியிட தேர்வு செய்யப்பட்டனர்.
வஜீர்பூரைச் சேர்ந்த ராகினி நாயக் மற்றும் கஸ்தூர்பா நகரைச் சேர்ந்த அபிஷேக் தத் ஆகியோரையும் கட்சி களமிறக்கியது.