நரேந்திர மோடி ஜூன் 9-ம் தேதி பிரதமராக பதவியேற்கிறார்
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்த மோடி, தனது தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்.டி.ஏ) அரசாங்கத்தை அமைக்க உரிமை கோரினார்.

நரேந்திர மோடி மூன்றாவது முறையாக ஜூன் 9 ஆம் தேதி இரவு 7:15 மணிக்கு பிரதமராக பதவியேற்பார் என்று குடியரசுத் தலைவர் மாளிகை வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது. அன்றைய தினம் அவரது அமைச்சரவை உறுப்பினர்களும் பதவியேற்பார்கள்.
முன்னதாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்த மோடி, தனது தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்.டி.ஏ) அரசாங்கத்தை அமைக்க உரிமை கோரினார்.
இதுகுறித்து குடியரசுத் தலைவர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 75 (1) வது பிரிவின் கீழ் தனக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தைப் பயன்படுத்தி, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று இந்தியப் பிரதமர் அலுவலகத்திற்கு நரேந்திர மோடியை நியமித்துள்ளார்.
"குடியரசுத் தலைவர் திரு. நரேந்திர மோடியிடம் கேட்டுக் கொண்டார்: அ) மத்திய அமைச்சரவையில் உறுப்பினர்களாக நியமிக்கப்பட வேண்டிய மற்றவர்களின் பெயர்கள் குறித்து தனக்கு ஆலோசனை வழங்க வேண்டும்; மற்றும் ஆ) குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறும் பதவியேற்பு விழாவின் தேதி மற்றும் நேரத்தைக் குறிப்பிட வேண்டும்" என்று குடியரசுத் தலைவர் மாளிகை மேலும் கூறியது.