நீதிபதி யஷ்வந்த் வர்மா பதவி விலக மறுப்பு
விசாரணைக் குழுவின் முடிவுகளை விவரித்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமருக்கு கடிதம் எழுதியதாக வட்டாரங்கள் தெரிவித்தன.

அவரது இல்லத்தில் இருந்து ஏராளமான பணம் மீட்கப்பட்ட நீதிபதி யஷ்வந்த் வர்மா, உயர் நீதிமன்ற நீதிபதி பதவியை விட்டு விலக மறுத்துவிட்டார் என்று வட்டாரங்கள் வியாழக்கிழமை தெரிவித்தன.
இதையடுத்து, நீதிபதியை பதவி நீக்கம் செய்வதற்கான செயல்முறை விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால், விசாரணைக் குழுவின் முடிவுகளை விவரித்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமருக்கு கடிதம் எழுதியதாக வட்டாரங்கள் தெரிவித்தன.
தலைமை நீதிபதிக்கு அனுப்பிய பதிலில், நீதிபதி வர்மா தனது நீதித்துறை கடமையில் இருந்து விலக மறுத்துவிட்டார் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பின்னர் விசாரணை அறிக்கை மற்றும் நீதிபதி வர்மாவின் பதிலின் நகலை ஜனாதிபதி மற்றும் பிரதமர் மோடிக்கு தலைமை நீதிபதி கன்னா அனுப்பி வைத்தார். உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கான விசாரணை நடைமுறையின் கீழ், பதவி விலக மறுப்பது' என்பது மட்டுமே தலைமை நீதிபதி ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு கடிதம் எழுதக் கூடிய ஒரே சந்தர்ப்பமாகும்.