பா.ஜ.க. இல்லாமல் உலக அமைதி இல்லை: கர்நாடக எம்.பி.
இஸ்லாம் இருக்கும் வரை உலக அமைதி இல்லை என்பதை நான் முன்பே தெரிவித்துள்ளேன். இதையடுத்து என் மீது வழக்கு தொடர்ந்தனர். அதற்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன்."

சங் பரிவார் மற்றும் பாரதிய ஜனதா கட்சி இல்லாமல் உலக அமைதி ஏற்படாது என்று உத்தர கன்னடா தொகுதி பாஜக எம்பி அனந்த்குமார் ஹெக்டே தெரிவித்துள்ளார்.
"நாம் இருந்தால் மட்டுமே இந்த உலகத்தை காப்பாற்ற முடியும். நாங்கள் பா.ஜ., மற்றும் சங்பரிவார் உறுப்பினர்கள். நாம் இங்கேயே இருந்தால், உலகில் அமைதி இருக்கும். நாம் இல்லையென்றால் உலக அமைதி இல்லவே இல்லை" என்றார் ஹெக்டே.
இஸ்லாம் இருக்கும் வரை உலக அமைதி இல்லை என்பதை நான் முன்பே தெரிவித்துள்ளேன். இதையடுத்து என் மீது வழக்கு தொடர்ந்தனர். அதற்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன்."
அவரது இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக உள்துறை அமைச்சர் ஜி.பரமேஸ்வரா, “பாஜக எம்.பி மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறினார். சட்டம் ஒழுங்கு பிரகாரம் நடவடிக்கை எடுப்போம் என்று கூறிய அமைச்சர், எம்.பி.யின் இந்த அறிவிப்பு அமைதியின்மையை ஏற்படுத்தும் என்றும் கூறினார்.