பிரதமரின் 'பூரி கோயில் பொக்கிஷ அறைச் சாவி' கருத்துக்கு திமுக கண்டனம்
ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கின் நெருங்கிய உதவியாளரும், தமிழகத்தைச் சேர்ந்தவருமான வி.கே.பாண்டியனை நோக்கி அவர் இவ்வாறு பேசினார்.

பூரி ஜெகந்நாதர் கோயிலின் பொக்கிஷ அறை சாவி காணாமல் போனதாகப் பிரதமர் நரேந்திர மோடி கூறியதற்கு திமுக புதன்கிழமை எதிர்ப்பு தெரிவித்தது.
இதற்கு திமுக தொண்டர்கள் கண்டனம் தெரிவித்து பிரதமரின் சுவரொட்டிகளைக் கிழித்தெறிந்தனர்.
ஒடிசா மாநிலம் அங்குல் நகரில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, காணாமல் போன ஜெகந்நாதர் கோயிலின் ரத்தினப் பண்டார சாவி 6 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது என்று கூறினார். ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கின் நெருங்கிய உதவியாளரும், தமிழகத்தைச் சேர்ந்தவருமான வி.கே.பாண்டியனை நோக்கி அவர் இவ்வாறு பேசினார்.
இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழரை பூரி ஜெகந்நாதர் கோவில் பொக்கிஷத்தைக் கொள்ளையடிப்பவர்களாக பிரதமர் மோடி சித்தரித்துள்ளார்.
ஒரு பிரதமர் வடக்கில் தமிழரை இழிவுபடுத்துவதும், மாநிலங்களுக்கு இடையே பகைமையை உருவாக்குவதும் நியாயமா? தான் வகிக்கும் பதவியின் கண்ணியத்தை மறந்து, வாக்குகளுக்காக இதுபோன்ற முறையில் நடந்து கொள்வதை பிரதமர் நிறுத்திக் கொள்ள வேண்டும்" என்று மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.