பிரதமர் மோடி தேர்தலில் போட்டியிட 6 ஆண்டுகள் தடை கோரிய மனு தள்ளுபடி
ஆனந்த் எஸ்.ஜொந்தாலே என்பவர் தாக்கல் செய்த மனுவில், உத்தரப் பிரதேசத்தில் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதற்காக பிரதமர் மோடியை 6 ஆண்டு காலத்திற்கு தேர்தலில் போட்டியிட தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று கோரினார்.

தேர்தல் நடத்தை விதிகளை மீறியதற்காக பிரதமர் நரேந்திர மோடியை தேர்தலில் போட்டியிட தகுதி நீக்கம் செய்யக் கோரிய மனுவைத் தில்லி உயர் நீதிமன்றம் திங்கள்கிழமை தள்ளுபடி செய்தது.
ஆனந்த் எஸ்.ஜொந்தாலே என்பவர் தாக்கல் செய்த மனுவில், உத்தரப் பிரதேசத்தில் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதற்காக பிரதமர் மோடியை 6 ஆண்டு காலத்திற்கு தேர்தலில் போட்டியிட தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று கோரினார்.
நீதிபதி சச்சின் தத்தா தலைமையிலான ஒற்றை நீதிபதி அமர்வு, மனுதாரர் தேர்தல் நடத்தை விதிமுறை மீறல் நடந்துள்ளது என்று "முன்கூட்டியே கருதுகிறார்" என்று கூறியது. எந்தவொரு புகாரின் மீதும் ஒரு குறிப்பிட்ட கருத்தை எடுக்க தேர்தல் ஆணையத்திற்கு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க முடியாது என்று அது கூறியது.
மனுதாரர் ஏற்கனவே தேர்தல் ஆணையத்தை அணுகியுள்ளதாகவும், புகார் குறித்து சுதந்திரமான முடிவை எடுக்கலாம் என்றும் நீதிமன்றம் கூறியது.
தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சித்தாந்த் குமார், புகார் முறையாக பரிசீலிக்கப்பட்டு உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று கூறியிருந்தார்.