Breaking News
பீகாரில் மற்றொரு பாலம் இடிந்து விழுந்தது
சமூக ஊடகங்களில் பரவி வரும் காணொலியில், பாலத்தின் நடுப்பகுதி தொய்வடைந்து வேகமாக ஓடும் நதியைத் தொடுவதைக் காணலாம்.

பீகாரின் கிஷன்கஞ்ச் மாவட்டத்தில் 13 ஆண்டுகள் பழமையான பாலத்தின் ஒரு பகுதி புதன்கிழமை இடிந்து விழுந்தது. இது ஒரு வாரத்தில் மாநிலத்தில் இதுபோன்ற நான்காவது சம்பவத்தைக் குறிக்கிறது.
பன்ஸ்பாரி ஷ்ரவன் சௌக்கில் மரியா ஆற்றின் துணை நதியில் 70 மீட்டர் நீளமுள்ள பாலம் மழையின் அழுத்தத்தைத் தாங்க முடியாமல் இடிந்து விழுந்தது. இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
சமூக ஊடகங்களில் பரவி வரும் காணொலியில், பாலத்தின் நடுப்பகுதி தொய்வடைந்து வேகமாக ஓடும் நதியைத் தொடுவதைக் காணலாம்.
சிவான் மற்றும் அராரியா மாவட்டங்களில் கடந்த வாரம் பாலம் இடிந்து விழுந்த மூன்று சம்பவங்கள் பதிவாகியுள்ளன.