Breaking News
புதிய மக்களவையில் பிரதமர் மோடி செங்கோலை நிறுவினார்
மக்களவையின் அவைத்தலைவர் நாற்காலிக்கு அருகில் வரலாற்று சிறப்புமிக்க செங்கோலை பிரதமர் மோடி நிறுவினார்.

இந்தியாவின் புதிய நாடாளுமன்ற கட்டடத் திறப்பு விழா நேற்று நடந்தது. பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மக்களவை அவைத்தலைவர் ஓம் பிர்லா ஆகியோர் புதிய நாடாளுமன்றக் கட்டடத்திற்கு வந்து பூசை மற்றும் வேள்வியில் கலந்து கொண்டனர். மக்களவையின் அவைத்தலைவர் நாற்காலிக்கு அருகில் வரலாற்று சிறப்புமிக்க செங்கோலை பிரதமர் மோடி நிறுவினார்.
புதிய நாடாளுமன்றத் திறப்பு விழா குறித்து தொடர்பில் பிரதமர் நரேந்திர மோடியைக் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடுமையாகச் சாடினார். "பாராளுமன்றம் மக்களின் குரல்! ஆனால் பாராளுமன்றத் திறப்பு விழாவை முடிசூட்டு விழாவாகப் பிரதமர் கருதுகிறார்", என்று காந்தி இந்தியில் எழுதினார்.