Breaking News
பூமியை நோக்கி வேகமாக வரும் விண்கல்

லண்டன் கண் என கருதப்படும் லண்டன் நகரில் உள்ள மிகப் பெரிய கத்தரிக்கோல் ஊஞ்சலை விட மிகப் பெரிய விண்கல் பூமியை நோக்கி வேகமாக வந்துக்கொண்டிருப்பதாக நாசா நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த விண்கல் நிமிடத்திற்கு 11.8 கிலோ மீற்றர் வேகத்தில் அதாவது மணிக்கு 26 ஆயிரம் மைல் வேகத்தில் பயணிப்பதாகவும் அந்த நிறுவனம் கூறியுள்ளது.
இதன் வேகமானது ஒலியை விட 9 மடங்கு அதிகம் என கூறப்பட்டுள்ளது.
2013 WV 44 என்ற இந்த விண்கல் நாளை மறுதினம் புதன் கிழமை முற்பகல் 9 மணியளவில் புவி வட்டப்பாதைகளுக்குள் வரும் என விண்ணியல் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
பூமியை நோக்கி வரும் இந்த விண்கல்லை நாசா விஞ்ஞானிகள் மிக உன்னிப்பாக அவதானித்து வருகின்றனர்.
இந்த விண்கல் 524 அடி (160 மீட்டர்) விட்டம் கொண்டதாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.