மத்திய அரசின் ஒப்புதலுடன் மத்திய பிரதேசத்தில் குடியுரிமை திருத்த சட்டம் அமல்படுத்தப்படும்: மோகன் யாதவ்
மத்திய அரசின் கொள்கை மற்றும் ம.பி அரசின் கொள்கை ஆகிய இரண்டும் ஒன்றுதான். நாங்கள் 100 சதவீதம் தயாராக இருக்கிறோம். மத்திய அரசு சொன்னவுடன் சிஏஏ அமல்படுத்தப்படும்" என்று மோகன் யாதவ் ஆஜ் தக் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் கூறினார்.

மத்திய அரசு ஒப்புதல் வழங்கும் போது குடியுரிமை திருத்தச் சட்டம் மாநிலத்தில் செயல்படுத்தப்படும் என்று மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ் தெரிவித்துள்ளார்.
2019 ஆம் ஆண்டில் பாஜக தலைமையிலான அரசாங்கத்தால் இயற்றப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டம், 2014 டிசம்பர் 31 க்கு முன்னர் பங்களாதேஷ், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியாவிற்குள் நுழைந்த இந்துக்கள், சீக்கியர்கள், சமணர்கள், பௌத்தர்கள், பார்சிகள் மற்றும் கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட துன்புறுத்தப்பட்ட முஸ்லிம் அல்லாத புலம்பெயர்ந்தோருக்கு இந்தியக் குடியுரிமையை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.