Breaking News
ராகுல் காந்தி மீதான நாடாளுமன்ற 'தாக்குதல்' வழக்கு குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது
கைகலப்பின் போது உடல் ரீதியான தாக்குதல் மற்றும் காயங்கள் ஏற்பட்டதாக குற்றம் சாட்டியுள்ளனர்.

ஆளும் பாஜக மற்றும் காங்கிரஸ் எம்.பி.க்களின் போராட்டத்தின் போது நாடாளுமன்றத்திற்கு வெளியே ஏற்பட்ட மோதல் தொடர்பான விசாரணையை தில்லிக் காவல்துறை குற்றப்பிரிவு கையில் எடுத்துள்ளது. இரு தரப்பினரும் ஒருவருக்கொருவர் புகார் அளித்துள்ளனர்.
கைகலப்பின் போது உடல் ரீதியான தாக்குதல் மற்றும் காயங்கள் ஏற்பட்டதாக குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்த சம்பவத்தில் இரண்டு பாஜக எம்.பி.க்கள் காயமடைந்தனர், பின்னர் அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் பாஜக எம்பி பிரதாப் சந்திர சாரங்கியின் நெற்றியில் காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.