ரோகித் வேமுலா தற்கொலை வழக்கை காவல்துறையினர் முடித்து வைப்பு
வேமுலாவுக்கு பல பிரச்சினைகள் இருந்தன. அவை அவரை தற்கொலைக்கு தூண்டியிருக்கலாம் என்று அது மேலும் கூறியது.

ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் பி.எச்.டி மாணவராக இருந்த ரோகித் வேமுலாவின் மரணம் தொடர்பான விசாரணையை முடித்து தெலுங்கானா காவல்துறையினர் தாக்கல் செய்தனர். வேமுலா 2016 ஜனவரியில் தனது வாழ்க்கையை முடித்துக் கொண்டார்.
போலீஸ் விசாரணையில், வேமுலா தன்னை பட்டியலின பிரிவைச் சேர்ந்தவர் என்று அடையாளம் காட்டியதால், அவரது உண்மையான சாதி வெளியாகிவிடும் என்ற அச்சத்தால் அவரது தற்கொலை உந்தப்பட்டதாக தெரிவிக்கிறது.
ஹைதராபாத் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் அப்பா ராவ், அப்போதைய செகந்திராபாத் எம்பி பண்டாரு தத்தாத்ரேயா, மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, முன்னாள் எம்எல்சி என்.ராமச்சந்தர் ராவ் மற்றும் ஏபிவிபி தலைவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
ரோகித் வேமுலா பட்டியலினச் சமூகத்தைச் சேர்ந்தவர் அல்ல என்பது அவருக்குத் தெரியும் என்றும், அவரது தாயார் அவருக்கு எஸ்சி சான்றிதழ் பெற்றுத் தந்ததாகவும் காவல்துறை நீதிமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. இது தொடர்ச்சியான அச்சங்களில் ஒன்றாக இருக்கலாம், ஏனெனில் இது அம்பலப்படுத்தப்பட்டால் அவர் பல ஆண்டுகளாக சம்பாதித்த கல்விப் பட்டங்களை இழக்க நேரிடும் என்றும் வழக்கை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருப்பார் என்றும் அறிக்கை கூறியுள்ளது.
வேமுலாவுக்கு பல பிரச்சினைகள் இருந்தன. அவை அவரை தற்கொலைக்கு தூண்டியிருக்கலாம் என்று அது மேலும் கூறியது.
குற்றம் சாட்டப்பட்டவரின் நடவடிக்கைகள் வேமுலாவை தற்கொலைக்கு தூண்டியது என்பதற்கு எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.