வயதான பயணி போல் மாறுவேடமிட்டு தலைமுடி, தாடிக்கு சாயம் பூசிய இளைஞர் கைது
24 வயதான குரு சேவக் சிங் செவ்வாய்க்கிழமை இந்திரா காந்தி பன்னாட்டு (ஐஜிஐ) விமான நிலையத்தின் முனையம்-3 இல் சிஐஎஸ்எஃப் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

மூத்த குடிமகன் போல் தோற்றமளிக்கும் வகையில் தலைமுடி மற்றும் தாடிக்கு சாயம் பூசிய 24 வயது இளைஞர், கனடா செல்ல விமானத்தில் ஏற முயன்றபோது தில்லி விமான நிலையத்தில் பிடிபட்டார்.
24 வயதான குரு சேவக் சிங் செவ்வாய்க்கிழமை இந்திரா காந்தி பன்னாட்டு (ஐஜிஐ) விமான நிலையத்தின் முனையம்-3 இல் சிஐஎஸ்எஃப் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். அவர் தில்லி காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
பாதுகாப்பு சோதனையின் போது, சிங் தனது அடையாளத்தை ராஷ்விந்தர் சிங் சஹோட்டா (67) என்ற பெயரைக் கொண்ட பாஸ்போர்ட் வடிவில் காட்டினார். அவர் டெல்லியில் இருந்து புறப்படும் ஏர் கனடா விமானத்தில் ஏற வேண்டியிருந்தது.
இருப்பினும், கடவுசசீட்டில் குறிப்பிடப்பட்ட அவரது வயதுடன் அவரது குரல் மற்றும் தோல் பொருந்தாததால் சிஐஎஸ்எஃப் அதிகாரிகள் அவரது நடவடிக்கைகளை சந்தேகத்திற்குரியதாக கண்டனர்.