வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுடன் ராகுல் காந்தி சந்திப்பு
காங்கிரஸ் தலைவர்கள் அப்பகுதியில் நிலவரத்தை பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்தனர்.

கேரளாவின் வயநாட்டில் உள்ள சூரல்மலைவில் நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தை காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, அக்கட்சியின் தலைவர் பிரியங்கா காந்தியுடன் இணைந்து பார்வையிட்டார். காங்கிரஸ் தலைவர்கள் அப்பகுதியில் நிலவரத்தை பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்தனர்.
வயநாட்டில் மக்களைச் சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, "வயநாடு, கேரளா மற்றும் தேசத்திற்கு இது ஒரு பயங்கரமான சோகம், நிலைமையைப் பார்க்க நாங்கள் இங்கு வந்துள்ளோம். எத்தனை பேர் குடும்ப உறுப்பினர்களை இழந்துள்ளனர் என்பது வேதனை அளிக்கிறது. மற்றும் அவர்களின் வீடுகளுக்கு நாங்கள் உதவ முயற்சிப்போம் , செவிலியர்கள், நிர்வாகம் மற்றும் தன்னார்வலர்கள் முதலியோருக்கு நன்றி."
"எனது தந்தை இறந்தபோது நான் எப்படி உணர்ந்தேன் என்பதை இன்று உணர்கிறேன். இங்கு மக்கள் ஒரு தந்தையை மட்டுமல்ல, ஒட்டுமொத்த குடும்பத்தையும் இழந்துள்ளனர். இந்த மக்களுக்கு நாம் அனைவரும் மரியாதை மற்றும் பாசத்திற்கு கடமைப்பட்டுள்ளோம். ஒட்டுமொத்த தேசத்தின் கவனமும் வயநாடு மீது உள்ளது," என்று அவர் மேலும் கூறினார்.